பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி 32 மாடி கட்டிடத்தின் மீது ஏறிய "பிரஞ்சு ஸ்பைடர் மேன்"
பிரஞ்சு ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் நபர், ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் 32 மாடி கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம், துபாயின் புர்ஜ் அல் கலீஃபா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் ஏறி சாதனை படைத்த 58 வயதான அலைன் ராபர்ட், சுமார் 166 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடத்தின் மீது ஏறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு கீழே போக்குவரத்துக்கு தடை விதித்து ஏணி, ஆம்புலன்சுடன் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கட்டிட உச்சியில் இருந்தபடியே ராபர்ட் கையசைத்தார்.
Comments